Transparency International Sri Lanka (TISL) recently wrote to the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) requesting an update on the investigations launched in connection to the Pandora Papers revelations.
TISL reemphasized the power of CIABOC under the Section 7(3) of the Declaration of Assets and Liabilities Law No. 1 of 1975 (amended in 1988), to look into asset declarations of the persons implicated in the Pandora Papers leak, to determine if the assets revealed through the Pandora Papers are already declared in the asset declarations.
Following the Pandora Papers revelations TISL filed 2 complaints with CIABOC in connection to the assets of Former Dep. Minister Nirupama Rajapaksa and her spouse as well as former public official R. Paskaralingam
Through the letter, TISL requested to be informed of whether the asset declarations of the relevant individuals have been called for and examined by CIABOC. This information is key to to understanding whether the assets have been willfully omitted.
පැන්ඩෝරා පත්රිකා හෙළි කිරීම්වලට සම්බන්ධ විමර්ශනවල නවතම තත්ත්වය විමසමින් ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය විසින් අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවට ලිපියක් ඉදිරිපත් කරන ලදි.
පැන්ඩෝරා පත්රිකාවල නම් සඳහන් යැයි පැවසෙන පුද්ගලයන්ගේ වත්කම් ප්රකාශ පිළිබඳ විමර්ශනය කිරීමටත්, පැන්ඩෝරා පත්රිකාවලින් හෙළි වූ වත්කම් මේ වනවිටත් ප්රකාශයට පත් වී ඇතිදැයි නිශ්චය කර ගැනීමටත්, (1988 සංශෝධිත) 1975 අංක 1 දරන වත්කම් හා බැරකම් ප්රකාශ කිරීමේ පනතෙහි 7(3) වගන්තිය යටතේ අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවට හිමි බලය පිළිබඳ ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය නැවතත් අවධාරණය කළේය.
පැන්ඩෝරා පත්රිකා හෙළිදරව්වෙන් පසු, හිටපු නියෝජ්ය අමාත්ය නිරුපමා රාජපක්ෂ, ඇයගේ සැමියා, සහ හිටපු රාජ්ය නිලධාරි ආර්. පාස්කරලිංගම් යන අයගේ වත්කම් සම්බන්ධයෙන්, ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය විසින් අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවට මෑතක දී පැමිණිලි 2ක් ඉදිරිපත් කරන ලදි.
අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව අදාළ පුද්ගලයන්ගේ වත්කම් ප්රකාශ කැඳවීමක් සහ පරික්ෂා කිරීමක් සිදු කර ඇතිනම්, ඒ සම්බන්ධයෙන් දැනුම්වත් කරන ලෙස ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය මෙම ලිපිය මගින් ඉල්ලා සිටින ලදි. සිතාමතා ම වත්කම් සඳහන් කර නැතිදැයි අවබෝධ කර ගැනීමට මෙම තොරතුරු අත්යවශ්ය වේ.
பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் தற்போதைய நிலை தொடர்பில் அறியத்தருமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு (CIABOC) அனுப்பி வைத்த கடிதத்தினூடாக கோரியுள்ளது.
1975 ஆம் ஆண்டின் (1988 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட) 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தற் சட்டத்தின் பிரிவு 7(3) அடிப்படையில், பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விடயங்கள் குறித்த நபர்களினால் சமர்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனங்களில் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை CIABOC இன் அதிகாரத்தினை பயன்படுத்தி உறுதிப்படுத்துமாறு TISL நிறுவனம் மீண்டும் வலியுறுத்துகிறது.
பண்டோரா பேப்பர்ஸ் பகிரங்கப்படுத்திய ஆவணங்களின் அடிப்படையில் TISL நிறுவனமானது முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச, அவரது கணவர் மற்றும் ஓய்வு பெற்ற அரச அதிகாரி இராமலிங்கம் பாஸ்கரலிங்கம் ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகளை மேற்கொண்டது.
குறித்த நபர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்கள் CIABOC இனால் கோரப்பட்டு அது தொடர்பில் விசாரிக்கப்பட்டதா என்பதனை தெரிவிக்குமாறு TISL நிறுவனம் குறித்த கடிதத்தினூடாக கேட்டுக்கொள்கிறது. குறித்த சொத்துக்கள் வேண்டுமென்றே பிரகடனங்களில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள இந்த தகவல் மிக முக்கியமானதாகும்.