Skip links

TISL welcomes SriLankan’s decision to sue Airbus and calls for further domestic action

  • SriLankan Airlines to sue Airbus for $1bn in damages 
  • TISL concerned about lack of accountability for actions of those involved locally
  • TISL has corresponded with the SFO in UK regarding the incident
  • TISL calls on GOSL to introduce Proceeds of Crime Law

Transparency International Sri Lanka (TISL) welcomes the decision by SriLankan Airlines to sue the company Airbus SE for $ 1 billion damages, loss of reputation, reimbursement of costs and interest.  Sri Lankan Airlines has also called for the cancellation of the purchase agreement for four A350-900 Airbus aircraft and the return of the advance payment of $ 19 million made for the aircraft. The move by SriLankan Airlines follows information revealed through a Deferred Prosecution Agreement between the Serious Fraud Office (SFO), UK and Airbus SE, in relation to the bribing of public officials by Airbus SE in several countries including Sri Lanka. While commending the move by SriLankan Airlines to sue Airbus, TISL is concerned that the alleged perpetrators of corruption in Sri Lanka are yet to be held accountable domestically.

TISL has been constantly advocating for action by the Sri Lankan authorities to hold to account those responsible for the significant losses inflicted on the Sri Lankan public through this incident, amounting to at least $98 million (approximately 19 billion rupees). This money alone could have been used to import around 24.5 million doses of Covid vaccines at a time when the country is under severe financial stress in a pandemic-stricken economy.

In March 2020 TISL wrote to the Serious Fraud Office (SFO) in the United Kingdom regarding the Deferred Prosecution Agreement, highlighting concerns whether the “General Principles to compensate overseas victims (including affected states) in bribery, corruption and economic crimes cases” had been given due consideration during the investigation and negotiation phases. TISL also highlighted the fact that on 5 prior instances the SFO worked together with the National Crime Agency (NCA) and the Crown Prosecution Service (CPS) to secure compensation for overseas victims totaling £42.9mn.

The SFO responding to TISL in June 2020, stated that it was challenging to identify a quantifiable loss arising from the Airbus deal and due to this and a number of other reasons, there was no direction made for victim compensation from Airbus SE. It added that there was no evidence to suggest that any of the products or services which Airbus sold to customers were defective or unwanted. However, the SFO did highlight that the Deferred Prosecution Agreement did grant room for victims to claim compensation. The move by SriLankan Airlines to seek compensation from Airbus comes within this context and should be commended.

However, it should be noted that Sri Lanka does not have a comprehensive legal framework for the management of recovered assets. As a signatory to the UN Convention Against Corruption (UNCAC), Sri Lanka is responsible to cooperate in the international arena to combat the transfer of proceeds of crime and to recover such proceeds. Sri Lanka reiterated this commitment in 2015 at the London Anti-Corruption Summit and at the Global Forum on Asset Recovery (GFAR) in 2017, pledging to prioritize the recovery of stolen assets.

In 2018, TISL contributed to a multistakeholder effort to draft a policy framework on stolen asset recovery, which provides a proposed legal framework to investigate, identify, trace, seize, and transfer to Sri Lanka and manage such assets. Given the possibility of lost monies being returned to Sri Lanka as a result of the action filed by the authorities in this case, it is vital that this policy framework be converted into law, so that the recovery process may be managed effectively.

TISL is also concerned that the alleged perpetrators of this act of grand corruption in Sri Lanka are yet to be held accountable domestically. Commending the legal action taken, TISL as a longstanding advocate for accountability on the bribery involving Airbus SE, calls upon the government to take action against the implicated individuals domestically and to expedite the development of a Proceeds of Crime law.

ශ්‍රී ලංකන් එයාර්ලයින්ස් විසින් එයාර්බස් සමාගමට එරෙහිව නඩු පැවරීම
පිළිබඳ TISL ආයතනයේ ප්‍රසාදය – දේශීය ක්‍රියාමාර්ග වෙත අවධානය යොමුකරන මෙන් බලධාරීන්ගෙන් ඉල්ලීමක්.

  • ශ්‍රී ලංකන් එයාර්ලයින්ස් විසින් ඩොලර් බිලියන 1ක හානිය වෙනුවෙන් එයාර්බස් සමාගමට එරෙහිව නඩු පැවරීමට පියවර ගෙන ඇත.
  • දේශීයව සම්බන්ධ වූ පුද්ගලයින්ට එරෙහිව ගනු ලබන වගවීමේ ක්‍රියාමාර්ගයන් පිළිබඳ TISL ආයතනයේ අවධානය යොමු වී ඇත.
  • සිදුවීමට අදාලව TISL ආයතනය එක්සත් රාජධානියේ SFO ආයතනය සමඟින් තොරතුරු හුවමාරුවක් සිදු කරන ලදී.
  • අපරාධයක් නිසා ඇතිවූ දේපළ පිළිබඳ නීතිය (Proceeds of Crime Law) හඳුන්වා දෙන්නැයි TISL ආයතනය ශ්‍රී ලංකා රජයෙන් ඉල්ලා සිටී.

සිදු වූ හානිය, අපකීර්තිය, ප්‍රතිපූර්ණය සහ පොලිය වෙනුවෙන් ඩොලර් බිලියන එකක වන්දි මුදලක් අය කරගැනීම සඳහා ‍ශ්‍රී ලංකන් එයාර්ලයින්ස් ආයතනය විසින් එයාර්බස් සමාගමට එරෙහිව නඩු පැවරීම පිළිබඳව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටර්නැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනය ප්‍රසාදය පලකර සිටී. එසේම A350 – 900 වර්ගයේ ගුවන් යානා මිලදී ගැනීම සඳහා එයාර්බස් සමාගම සමඟ එකඟව තිබූ ගිවිසුම අවලංගු කිරීමටත්, එම ගිවිසුම යටතේ ලබා දී ඇති ඩොලර් මිලියන 19ක අත්තිකාරම් මුදල නැවත අයකර ගැනීමටත් ශ්‍රී ලංකන් එයාර්ලයින්ස් ආයතනය තීරණය කර ඇත. ශ්‍රී ලංකන් එයාර්ලයින්ස් ආයතනය මෙවැනි නීතිමය ක්‍රියාමාර්ග ලබා ගෙන ඇත්තේ එයාර්බස් SE සමාගම විසින් ශ්‍රී ලංකාව ඇතුළු රටවල් කිහිපයක රාජ්‍ය නිලධාරීන්ට අල්ලස් දීමේ චෝදනාව සම්බන්ධයෙන් එක්සත් රාජධානියේ “බරපතල වංචා පිළිබඳ කාර්යාලය” (SFO) සහ එයාර්බස් SE සමාගම අතර ඇති කරගත් “ප්‍රමාද වී නඩු පැවරීමේ ගිවිසුම” (Deferred Prosecution Agreement) හරහා හෙළි වූ තොරතුරු පදනම් කරගනිමිනි. ශ්‍රී ලංකන් එයාර්ලයින්ස්හි මෙම තීරණය අගය කරන TISL ආයතනය, මෙම වංචාව සම්බන්ධයෙන් ශ්‍රීලංකාව තුළ දූෂණ චෝදනා ලැබූවන්ගේ වගවීම තවමත් දේශීයව ඉටු නොවී ඇති බවට අවධාරණය කර සිටී.

ශ්‍රී ලංකාවේ පොදු ජනතාවට ඩොලර් මිලියන 98ක පමණ (රුපියල් බිලියන 19ක් පමණ) විශාල මුල්‍ය අලාභයක් සිදුකරනු ලැබූ මෙම වංචාවට වගකිව යුත්තන්ට එරෙහිව ශ්‍රී ලංකාවේ බලධාරීන් විසින් නීතිමය ක්‍රියාමාර්ග ගතයුතු බව TISL ආයතනය දිගින් දිගටම පෙන්වා දී ඇත. COVID – 19 වසංගතයෙන් පීඩාවට ලක්වී, ආර්ථිකමය වශයෙන් රට දැඩි මූල්‍ය අපහසුතාවන් වලින් පෙලෙන මෙවැනි අවස්ථාවක දී, මිලියන 24.5ක් පමණ ප්‍රමාණයක COVID-19 එන්නත් ආනයනය කිරීම සඳහා මෙම මුදල් භාවිත කිරීමට හැකියාව පැවතිනි.

2020 මාර්තු මස එක්සත් රාජධානියේ බරපතල වංචා පිළිබඳ කාර්යාලයට (SFO) කල්ගත් නඩු පැවරීමේ ගිවිසුම පිළිබඳව ලිපියක් යොමුකරමින් TISL ආයතනය විමසා සිටියේ, SFO විසින් මෙම ගිවිසුමේ විමර්ශන සහ සාකච්ඡා වට වලදී ‘අල්ලස්, දුෂණ සහ ආර්ථික අපරාධ වල විදේශීය වින්දිතයින් (විදේශ රටවල්ද ඇතුළත්ව) සඳහා වන්දි ගෙවීමේ පොදු මූලධර්ම’ කෙරෙහි නිසි අවධානයක් යොමු කළේද යන්නයි. මෙහිදී TISLආයතනය තවදුරටත් අවධාරණය කර සිටියේ, පෙර අවස්ථා 5කදීම SFO ආයතනය National Crime Agency (NCA) සහ Crown Prosecution Service (CPS) සමඟ එක්ව විදේශීය වින්දිතයින් සඳහා පවුම් මිලියන 42.9ක වන්දි ලබා දීමට සමත් වී ඇති බවත්ය.

එයාර්බස් ගනුදෙනුව නිසා සිදුවූ නිශ්චිත අලාභය ගණනය කිරීම අසීරු කාර්යයක් නිසාත්, අනෙකුත් විවිධ හේතුන් නිසාත්, එහි වින්දිතයින්ට වන්දි ගෙවීමට එයාර්බස් සමාගමට නියෝග නොකළ බව 2020 ජූනි මස TISL ආයතනයට පිළිතරු දෙමින් SFO ආයතනය පවසා සිටියේය.එයාර්බස් සමගම විසින් සපයන ලද භාණ්ඩ හෝ සේවාවන් දෝෂ සහිත හෝ අනවශ්‍ය බව සනාථ කිරීමට කිසිඳු සාක්ෂියක් නොමැති බවද එම ආයතනය තවදුරත් පවසා සිටියේය. කෙසේ වෙතත්, ප්‍රමාද වී නඩු පැවරීමේ ගිවිසුම යටතේ වින්දිතයින්ට හානිපූර්ණ ඉල්ලා සිටීමට අවස්ථාව තිබූ බව ද SFO ආයතනය අවධාරණය කළේය. මේ පසුබිම තුළ ශ්‍රී ලංකන් එයාර්ලයින්ස් සමාගම විසින් එයාර්බස් සමාගමෙන් වන්දි ලබාගැනීමට ක්‍රියාමාර්ග ගැනීම පැසසිය යුතු කරුණක් වේ.

කෙසේවුවද, මේ සම්බන්ධයෙන් සැලකිය යුතු කරුණක් වන්නේ, අපරාධයකින් රටට අහිමි වී, නැවත ගෙන්වා ගත් දේපළ නිසි කළමනාකරණය සඳහා පුළුල් නීතිමය රාමුවක් ශ්‍රී ලංකාවේ නොමැති වීමයි. එක්සත් ජාතීන්ගේ දූෂණයට එරෙහි සම්මුතියේ කොටස්කරුවෙකු වශයෙන්, අපරාධයක් නිසා ඇති වූ දේපළ ගලනයට එරෙහිව සටන් කිරීමටත්, එවැනි දේපළ නැවත ගෙන්වා ගැනීමට සහයෝගය දැක්වීමටත් ජාත්‍යන්තර මට්ටමෙන් ක්‍රියා කිරීමට ශ්‍රී ලංකාව බැඳී සිටී. එමෙන්ම 2015 ලන්ඩන් හි පැවති දූෂණ විරෝධී සමුළුවේදීත්, 2017 පැවති “දේපළ නැවත ගෙන්වා ගැනීම”සම්බන්ධයෙන් වූ ගෝලීය මණ්ඩලයේදීත් (GFRA) අපරාධයකින් රටට අහිමි වූ දේපළ නැවත ගෙන්වා ගැනීම සඳහා ප්‍රමුඛතාවය ලබා දීමට ශ්‍රී ලංකාව ප්‍රතිඥා දී ඇත.

2018 වර්ෂයේදී අපරාධයකින් රටට අහිමි වූ දේපළ නැවත ගෙන්වා ගැනීමට ප්‍රතිපත්ති රාමුවක් නිර්මාණය කිරීමේ බහු පාර්ශ්වික ප්‍රයත්නයකට TISL ආයතනයද සහයෝගය දැක්වීය. එමගින් එවැනි දේපළ පිළිබඳ විමර්ශනය කිරීමට, හඳුනා ගැනීමට, අත්පත් කර ගැනීමට, ශ්‍රී ලංකාව තුළට ගෙන්වා ගැනීමට සහ එම දේපළ කළමනාකරණයට අවශ්‍ය නීතිමය රාමුවක් යෝජනා කරන ලදි. එයාර්බස් ගනුදෙනුව සම්බන්ධ මෙම අවස්ථාවේදීද, ශ්‍රී ලංකාවේ බලධාරීන් විසින් ගෙන ඇති නීතිමය ක්‍රියාමාර්ගය තුළින් මෙම මුදල් නැවත ශ්‍රී ලංකාවට ලබාගැනීමේ අවකාශයක් ඇති බැවින් එම මුදල් නිසිලෙස කළමනාකරණය කිරීමට නම් මෙම ප්‍රතිපත්ති රාමුව නීතියකට පරිවර්තනය වී තිබීම අත්‍යවශ්‍ය වේ.

මෙම මහා පරිමාණ දුෂණ වංචාව සම්බන්ධයෙන් ලංකාව තුළ චෝදනා ලැබූවන් නීති මාර්ගයෙන් වගවන ක්‍ර්‍ර්‍රියාමාර්ගයක් මෙරට තුළ තවමත් ඉටුවී නොමැති බවට TISL ආයතනයේ අවධානය යොමු වී ඇත. එයාර්බස් වංචාව සම්බන්ධයෙන් ගනු ලැබූ නීතිමය ක්‍රියාමර්ග පිළිබඳව ප්‍රසාදය පලකරන අතරම, මේ සම්බන්ධයෙන් වගවීමේ අවශ්‍යතාවය පිළිබඳව දිගුකලක් පෙනී සිටි ආයතනයක් වශයෙන්, මෙම වංචාවට හවුල් වූ ලාංකීය පුද්ගලයින්ට එරෙහිව දේශීය වශයෙන් නීතිමය ක්‍රියාමාර්ග ගන්නා ලෙසත්, අපරාධයක් නිසා ඇතිවූ දේපළ පිළිබඳ නීතිය කඩිනමින් ස්ථාපනය කරන ලෙසත් TISL ආයතනය රජයෙන් ඉල්ලා සිටී.

 

எயார்பஸ் விமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரும் இலங்கையின் தீர்மானத்தை TISL வரவேற்கின்ற அதேநேரம் உள்ளூர் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கின்றது.

    • ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் எயார்பஸ் நிறுவனத்திடம் இருந்து 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரவுள்ளது.
    • உள்நாட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பொறுப்புக்கூறலுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக TISL கரிசணை கொண்டுள்ளது.
    • சம்பவம் குறித்து பிரித்தானியாவிலுள்ள SFO நிறுவனத்துடன் TISL தொடர்பாடல்களில் ஈடுபட்டுள்ளது.
    • குற்றச் செயல்களின் வரும்படிகள் பற்றிய சட்டத்தை (Proceeds of Crime Law) அறிமுகப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு TISL கோரிக்கை விடுக்கின்றது.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை, செலவுகள் மற்றும் வட்டி ஆகியவற்றை திருப்பிச்செலுத்துதல் உட்பட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டினை எயார்பஸ் எஸ்.ஈ. நிறுவனத்திடமிருந்து கோருவதற்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் தீர்மானித்துள்ளதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது (TISL) வரவேற்கின்றது. அதேநேரம் A350-900 ரக நான்கு விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கும், ஏற்கனவே செலுத்தப்பட்ட முற்பணம் 19 மில்லியன் அமெரிக்க டொலரை திருப்பிச் செலுத்துமாறும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் கோரியுள்ளது. இலங்கை உட்பட பல நாடுகளில் எயார்பஸ் எஸ்.ஈ. நிறுவனமானது அரச அதிகாரிகள் பலருக்கும் இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக, பிரித்தானியாவிலுள்ள தீவிர மோசடிகளைக் கண்காணிக்கும் அலுவலகம் (SFO), மற்றும் எயார்பஸ் எஸ்.ஈ., ஆகியவற்றுக்கு இடையே ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒப்பந்தத்தின் மூலம் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவைகள் நிறுவனம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எயார்பஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்வதற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவைகள் நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையைப் பாராட்டும் அதேவேளை, இலங்கையில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவளிகள் தொடர்பில் உள்நாட்டில் பொறுப்புக்கூறும் வகையிலான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் TISL சுட்டிக்காட்டுகின்றது.

இந்த சம்பவத்தின் மூலம் இலங்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க இழப்புகளுக்குக் காரணமானவர்களை கருத்திற்கொண்டு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் TISL தொடர்ந்து வலியுறுத்துவதுடன், அன்னளவாக 98 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 19 பில்லியன் ரூபா) இழப்பு வழங்கவேண்டும். அத்துடன் தொற்று நோய் பரவலால் பாரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ள தற்போதைய சூழ்நிலையில், அந்த தொகையைக் கொண்டு 24.5 மில்லியன் கொவிட் தடுப்பு மருந்துகளை நாட்டிற்கு கொள்வனவு செய்யமுடியும்.

2020 மார்ச் மாதமளவில் பிரித்தானியாவிலுள்ள தீவிர மோசடிகளைக் கண்காணிக்கும் அலுவலகத்திற்கு (SFO), ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக TISL நிறுவனமானது, ஒப்பந்தத்தின் விசாரணை மற்றும் பேச்சுவார்த்தைகளின் போது, “இலஞ்சம், ஊழல் மற்றும் பொருளாதார குற்றவியல்களால் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு (பாதிக்கப்பட்ட நாடுகள் உட்பட) இழப்பை ஈடுசெய்யும் பொதுக் கோட்பாடுகள் தொடர்பாக சரியான முறையில் கவனம் செலுத்தப்பட்டதா என கடிதம் மூலம் கோரியிருந்தது. இவ்வாறான 5 சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு 42.9 மில்லியன் பவுண் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தீவிர மோகடிகளைக் கண்காணிக்கும் அலுவலகம் (SFO), பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) மற்றும் அரச வழக்கு விசாரணை சேவை (CPS) இணைந்து பணியாற்றியுள்ளதாகவும் TISL நிறுவனமானது மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

2020 ஜுன் மாதம் TISL ற்கு கடிதம் மூலம் பதிலளித்திருந்த SFO அலுவலகமானது> இழப்பீடுகளின் பெறுமானத்தை அளவீடு செய்வது சவாலானது எனவும்> எயார்பஸ் ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் வேறு பல காரணங்களாலும் எயார்பஸ் எஸ்.ஈ நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குதற்கான உத்தரவை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் எயார்பஸ் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த எந்தவொரு தயாரிப்பில் குறைபாடு உள்ளது அல்லது தேவையற்றவை என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லையென மேலும் அந்த அலுவலகம் கூறியுள்ளது. எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பை ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக SFO சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சூழ்நிலையின் அடிப்படையிலேயே, எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இழப்பீடு கோருவதற்கான நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மீட்கப்பட்ட சொத்துகளை நிர்வகிப்பதற்கான விரிவான சட்ட கட்டமைப்பு இலங்கையில் இல்லை என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் (UNCAC) கைச்சாத்திட்டுள்ள ஒரு தரப்பாக, குற்றத்தினால் வரவேண்டிய வருமானத்தை மாற்றுவதை எதிர்த்து சர்வதேச அரங்கில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அத்தகைய வருமானத்தை மீட்பதற்கும் இலங்கைக்கு பொறுப்புள்ளது. இதற்கான உறுதிப்பாட்டை 2015 இல் லண்டனில் நடைபெற்ற ஊழலை தடுப்பதற்கான மாநாட்டிலும், 2017 இல் சொத்து மீட்புக்கான உலகளாவிய மன்றத்திலும் (GFAR) இலங்கை மீண்டும் வலியுறுத்தியதுடன், திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான முன்னுரிமையை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், திருடப்பட்ட சொத்து மீட்பு தொடர்பான கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிக்கு TISL பங்களிப்பு வழங்கியதுடன், இதன்மூலம் விசாரணை, அடையாளம் காணல், தடமறிதல், பறிமுதல் மற்றும் இடமாற்றம் மேற்கொள்ளல், அத்தகைய சொத்துகளை நிர்வகிப்பதற்கும் முன்மொழியப்பட்ட சட்டக் கட்டமைப்பு வழிவகுக்கின்றது. இந்த விடயத்தில் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விளைவாக இழக்கப்பட்ட தொகை இலஙகைக்கு மீள செலுத்தப்படுவதற்கான வாய்ப்பைக் கவனத்திற்கொண்டு, இந்த கொள்கைக் கட்டமைப்பை சட்டமாக மாற்றவேண்டியது அவசியமாகும் என்பதுடன், இதனால் மீட்பு செயன்முறையை திறம்பட நிர்வகிப்பதற்கான சூழ்நிலையும் ஏற்படலாம்.

இதேவேளை, இலங்கையில் இந்த பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் TISL கவனம் செலுத்துகின்றது. எயார்பஸ் இலஞ்ச மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளைப் பாராட்டும் அதேவேளை, இவ்விடயம் தொடர்பாக பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தி நீண்டகாலமாக செயற்பட்ட நிறுவனம் என்ற வகையில்> TISL, உள்நாட்டில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் வரவுத் தொகையை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

 

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.