Transparency International Sri Lanka (TISL) has filed a formal complaint with the Election Commission of Sri Lanka (ECSL) regarding recent appointments made at the Palmyrah Development Board (PDB) in Jaffna, which appear to contravene current election laws.
On October 10, Selvin Ireneuss Mariampillai was appointed as Chairman of the PDB. Just 12 days later, on October 22, Mariampillai was replaced by Vinayagamoorthy Sahadevan. These swift changes in leadership, along with the addition of several new board members, were reportedly approved by the Cabinet Minister, despite existing restrictions set by the ECSL.
According to election laws and the ECSL’s official Gazette issued on September 25, all government institutions are prohibited from making new appointments, promotions, or transfers during the election period without prior approval from the Election Commission. The recent changes at the PDB raise serious concerns about compliance with these legal standards and call into question the governance practices upheld during this sensitive period.
These appointments undermine public trust and could challenge the fairness of the electoral process. TISL urge the Election Commission to investigate these appointments and take prompt corrective action.
TISL further calls on the Government to halt such appointments across public institutions until the conclusion of the General Election to avoid perceptions of political bias or undue influence over public bodies. Committed to ensuring transparency and accountability, TISL will continue to monitor the situation and advocate for adherence to ethical and legal guidelines within public institutions.
තල් සංවර්ධන මණ්ඩලය තුළ සිදුව ඇති මැතිවරණ නීති උල්ලංඝනය සම්බන්ධයෙන් ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනයේ අවධානය
මැතිවරණ නීතිවලට පටහැනි ආකාරයෙන් යාපනයේ පිහිටි තල් සංවර්ධන මණ්ඩලයේ මෑත කාලීනව සිදු කරන ලද පත්වීම් සම්බන්ධයෙන් ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය (TISL) ඔක්තෝබර් 29 දින ශ්රී ලංකා මැතිවරණ කොමිෂන් සභාවට පැමිණිලි කළේය.
තල් සංවර්ධන මණ්ඩලයේ සභාපති ධූරයට පසුගිය ඔක්තෝම්බර් 10 වනදා සෙල්වින් ඉරේනියස් මරියම්පිල්ලෙයි පත් කරන ලදී. ඊට දින 12කට පසුව, ඔක්තෝබර් 22 වන දින, ඔහුව ඉවත් කොට විනයාගමූර්ති සහදේවන් එම තනතුරට පත් කර ඇත. මෙලෙස ප්රධානීන් වෙනස් කිරීම මෙන්ම නව අධ්යක්ෂ මණ්ඩල සාමාජිකයින් කිහිපදෙනෙකු පත් කිරීම මැතිවරණ කොමිසම විසින් පනවා ඇති සීමාවන් නොතකා විෂයභාර අමාත්යවරයා විසින් අනුමත කර ඇති බව වාර්තා වේ.
මැතිවරණ කොමිෂන් සභාවේ අනුමැතියකින් තොරව මැතිවරණ කාලසීමාව තුළ රාජ්ය ආයතනවල බඳවා ගැනීම්, පත්වීම්, උසස්වීම් හෝ ස්ථාන මාරු සිදු කළ නොහැකි බව මැතිවරණ නීතියේ මෙන්ම සැප්තැම්බර් 25 වැනි දින මැතිවරණ කොමිෂන් සභාව විසින් නිකුත් කරන ලද ගැසට් පත්රයේ සඳහන් වෙයි. මැතිවරණයක් පැවැත්වෙන සංවේදී කාලසීමාවක් තුළ එම නීතියට අනුගත නොවන ආකාරයට රජය හැසිරීම ප්රශ්නකාරී තත්ත්වයක් මතු කරයි.
මෙවැනි පත් කිරීම් හරහා මහජන විශ්වාසය පළුදු විය හැකි අතර මැතිවරණ ක්රියාවලියේ සාධාරණත්වයට අභියෝගයක් විය හැකිය. මේ පිළිබඳව සොයා බලා කඩිනම් පියවර ගන්නා ලෙස TISL ආයතනය මැතිවරණ කොමිසමෙන් ඉල්ලා සිටියි.
දේශපාලන පක්ෂග්රාහීත්වය සහ අනිසි බලපෑම් වළක්වා ගැනීම සඳහා මහ මැතිවරණය අවසන් වන තුරු රාජ්ය ආයතන සඳහා එවැනි පත්වීම් සිදු නොකරන ලෙස TISL ආයතනය රජයෙන් ඉල්ලා සිටියි.
විනිවිදභාවය සහ වගවීම සහතික කිරීම සඳහා කැපවී සිටින TISL ආයතනය, මෙම තත්ත්වය සමීපව නිරීක්ෂණය කරමින් රාජ්ය ආයතන තුළ ආචාරධාර්මික සහ නීතිමය මාර්ගෝපදේශ පිළිපැදීම වෙනුවෙන් දිගටම උද්දේශනය කරනු ලබයි.
பனை அபிவிருத்திச் சபையில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கேள்வி எழுப்புகிறது.
தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபையினால் (PDB) மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், அக்டோபர் 29 அன்று, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (ECSL) முறைப்பாடு செய்தது.
அக்டோபர் 10 ஆம் திகதி அன்று பனை அபிவிருத்திச் சபையின் (PDB) தலைவர் பதவிக்கு செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை நியமிக்கப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து 12 நாட்கள் இடைவெளியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக விநாயகமூர்த்தி சகாதேவன், அக்டோபர் 22 அன்று அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார். மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடைகளுக்கு மத்தியிலும் தலைவர்கள் மாற்றம் மற்றும் பல புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பான அமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செப்டம்பர் 25 அன்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவால் (ECSL) வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மற்றும் தேர்தல் சட்டத்தில், குறிப்பாக அரச அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன் அனுமதி பெறாமல், தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் எந்தவொரு ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் அல்லது இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முக்கியமான தேர்தல் காலகட்டத்தில் சட்டத்தை மதிக்காத வகையில் அரசாங்கம் நடந்துகொள்வது கேள்விக்குரிய சூழ்நிலையை எழுப்புகிறது.
இவ்வாறான நியமனங்கள் மூலம், பொதுமக்களின் நம்பிக்கை பலவீனப்படுத்துவதுடன் தேர்தல் நடைமுறையின் நேர்மைக்கும், ஜனநாயக செயல்முறையின் நியாயத்தன்மையும் கேள்விக்குட்படுத்தப்படலாம். இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என TISL கோருகிறது.
பொது நிறுவனங்கள் மீதான அரசியல் பக்கச்சார்பு அல்லது தேவையற்ற செல்வாக்கின் சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக பொதுத் தேர்தல் முடியும் வரை பொது நிறுவனங்களில் இத்தகைய நியமனங்களை இடைநிறுத்துமாறு TISL மேலும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் TISL நிறுவனமானது இவ்வாறான நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணிப்பதோடு, பொது நிறுவனங்களில் நெறிமுறை மற்றும் சட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என கோருகின்றது.