Skip links

Successful Completion of Two-Day Capacity-Building Training on RTI Implementation

Transparency International Sri Lanka (TISL) organized a two-day capacity-building training program titled “Implementation of RTI and Overcoming Practical Challenges” in coordination with the Ministry of Mass Media on March 25–26, 2025, at CEWAS, Ratmalana. The program was conducted for Information Officers of Public Authorities under the Western Provincial Council, with 70 participants in attendance.

This training aimed to deepen participants’ understanding of the Right to Information (RTI) Act No. 12 of 2016, while addressing the practical challenges often encountered in its implementation. By equipping Information Officers with the necessary knowledge and skills, the program sought to enhance transparency, accountability, and operational efficiency across public institutions—promoting RTI as a vital tool for good governance.

The sessions were facilitated by Mr. Piyatissa Ranasinghe, former Director General of the RTI Commission, delivered insightful sessions on the core objectives and scope of the RTI Act. Also, Mr. Raphael Vagliano, Legal Officer at the Centre for Law and Democracy (Canada), brought a global perspective to the training. He discussed international best practices, landmark RTI decisions, and strategic approaches to handling information requests. He also emphasized the increasing role of technology in improving access to information and enhancing institutional transparency.

The event concluded with a vote of thanks delivered by Mr. N.A.K.L. Wijenayake, Additional Secretary (Development) for RTI at the Ministry of Mass Media. A certificate awarding ceremony followed, recognizing the active engagement and commitment of all participants in advancing the Right to Information within their respective institutions.

ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා (TISL) ආයතනය “තොරතුරු දැනගැනීමේ අයිතිය ක්‍රියාත්මක කිරීම සහ ප්‍රායෝගික අභියෝග ජය ගැනීම” යන මැයෙන් ජනමාධ්‍ය අමාත්‍යාංශය සමඟ එක්ව 2025 මාර්තු 25 සහ 26 දිනවල රත්මලාන CEWAS හිදී දෙදින ධාරිතා සංවර්ධන පුහුණු වැඩසටහනක් සංවිධානය කරන ලදී. බස්නාහිර පළාත් සභාව යටතේ ඇති පොදු අධිකාරීන්හි තොරතුරු නිලධාරීන් 70 දෙනෙකු පමණ සහභාගීත්වයෙන් මෙම වැඩසටහන පවත්වන ලදී.

2016 අංක 12 දරන තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබද පනත (RTI) සම්බන්ධයෙන් සහභාගිවන්නන්ගේ අවබෝධය වැඩි දියුණු කිරීම සහ පනත ක්‍රියාත්මක කිරීමේදී මුහුණ දෙන ප්‍රායෝගික අභියෝගවලට විසඳුම් ලබා දීම මෙම පුහුණුවේ අරමුණ විය. තොරතුරු දැනගැනීමේ අයිතිය නිවැරදි රාජ්‍යකරණය සඳහා අත්‍යවශ්‍ය මෙවලමක් ලෙස ප්‍රවර්ධනය කරමින් තොරතුර නිලධාරීන්ට අවශ්‍ය දැනුම හා කුසලතා ලබා දීම හරහා රාජ්‍ය ආයතනවල විනිවිදභාවය, වගවීම සහ මෙහෙයුම් කාර්යක්ෂමතාව වැඩි දියුණු කිරීම මෙම වැඩසටහනෙහි අරමුණ විය.

තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබද (RTI) කොමිසමේ හිටපු අධ්‍යක්ෂ ජනරාල් පියතිස්ස රණසිංහ මහතා විසින් සැසියක් මෙහෙයවන ලද අතර, RTI පනතේ මූලික අරමුණු සහ විෂය පථය පිළිබඳ පුළුල් දැණුමක් ලබා දුනි.
එසේම, කැනඩාවේ Legal Officer at the Centre for Law and Democracy ආයතනයේ නීති නිලධාරී රෆායෙල් වැග්ලියානෝ මහතා ගෝලීය දර්ශනයන් පිලිබඳ අවදානය යොමු කළේය. ජාත්‍යන්තරයේ හොඳම භාවිතයන් (international best practices), RTI සම්බන්ද සන්දිස්ථානයන් සහ තොරතුරු ඉල්ලීම් හැසිරවීම සඳහා උපායමාර්ගික ප්‍රවේශයන් පිළිබඳව ඔහු සාකච්ඡා කළේය. තවද තොරතුරු වෙත ප්‍රවේශය වැඩිදියුණු කිරීමේදී සහ ආයතනික විනිවිදභාවය වැඩි දියුණු කිරීම උදෙසා නව තාක්ෂණයේ කාර්යභාරය ද ඔහු අවධාරණය කළේය.

ජනමාධ්‍ය අමාත්‍යාංශයේ තොරතුරු දැනගැනීමේ අයිතිය පිළිබඳ අතිරේක ලේකම් (සංවර්ධන) එන්.ඒ.කේ.එල්. විජේනායක මහතා විසින් ස්තූති කතාව කරන ලදී. තොරතුරු දැනගැනීමේ අයිතිය ප්‍රවර්ධනය කිරීම සඳහා සහභාගී වූ සියලු දෙනාගේම ක්‍රියාකාරී සහභාගීත්වය සහ කැපවීම අගය කරමින් සහතික ප්‍රදානය කිරීමේ උත්සවයක් ද මිට සමගාමීව පැවැත්විණි.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, வெகுசன ஊடக அமைச்சின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் “தகவலறியும் உரிமையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நடைமுறைச் சவால்களை வெற்றி கொள்ளல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை மார்ச் 25-26, ஆகிய திகதிகளில் ரத்மலானை CEWAS இல் வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிற்சித் திட்டம் மேல் மாகாண சபையின் கீழ் உள்ள பொது அதிகாரசபைகளின் தகவல் அதிகாரிகளுக்காக நடாத்தப்பட்டது, இதில் 70 பேர் கலந்து கொண்டனர்.

தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் குறித்த பங்கேற்பாளர்களின் புரிதலை ஆழப்படுத்துவதையும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அடிக்கடி எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களைக் கையாள்வதையும் இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டிருந்தது. தகவல் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் மூலம், பொது நிறுவனங்கள் முழுவதும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், நல்லாட்சிக்கான ஒரு முக்கிய கருவியாக RTI ஐ ஊக்குவிக்கவும் இந்தப் பயிற்சித் திட்டம் அமைந்திருந்தது.

திரு. பியதிஸ்ஸ ரணசிங்க, தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் அதன் பரப்பெல்லை குறித்து ஆழமான கருத்துக்களை அமர்வுகளில் முன்வைத்தார்.

மேலும், திரு. ரபேல் வக்லியானோ, சட்ட அதிகாரி, Centre for Law and Democracy (Canada), இந்தப் பயிற்சிக்கு உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டு வந்தார். அவர் சர்வதேச சிறந்த நடைமுறைகள், தகவலறியும் உரிமை தொடர்பான முக்கிய தீர்ப்புகள் மற்றும் தகவல் கோரிக்கைகளைக் கையாள்வதற்கான மூலோபாய அணுகுமுறைகள் குறித்து கலந்துரையாடினார். தகவலுக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் நிறுவன வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் தொழில்நுட்பம் ஆற்றிவரும் பங்களிப்பை அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வு, வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி, திட்டமிடல் மற்றும் தகவல்) திரு. என்.ஏ.கே.எல். விஜேநாயக்க அவர்களால் வழங்கப்பட்ட நன்றியுரையுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, அந்தந்த நிறுவனங்களுக்குள் தகவல் அறியும் உரிமையை மேம்படுத்துவதில் அனைத்து பங்கேற்பாளர்களின் தீவிர ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கபட்டன.

 

 

 

 

This website uses cookies to improve your web experience.