The Civil Society Initiative on Anti-Corruption Reform for Economic Recovery comprising Transparency International Sri Lanka (TISL), Verité Research, the Centre for Policy Alternatives (CPA), Sarvodaya, People’s Action for Free and Fair Elections (PAFFREL) and the National Peace Council (NPC) (the CSI Core Group) notes the news that the Executive Board of the International Monetary Fund (IMF) has this week concluded the first review of the 48-month EFF-supported program for Sri Lanka, and confirmed that Sri Lanka will have access to SDR 254 million (about US$330 million).
The CSI Core Group reiterates its view that governance and anti-corruption priorities that have been highlighted by CSOs in Sri Lanka as well as the IMF in their respective governance diagnostics, are a necessary foundation for economic recovery in Sri Lanka. Not giving adequate priority to these actions is likely to set Sri Lanka up for a second round of debt crisis in the next five years.
The CSOs welcome the IMF’s focus on promoting governance reforms within Sri Lanka’s program. However, they note with concern that the government has failed to implement basic commitments around transparency and anti-corruption that are mentioned in the current program. For example, the program expected the government to publish by the end of March 2023 on an online platform, relevant information on large-scale public procurement contracts and those receiving tax exemptions through various laws. The government has failed to do so to date. As noted in the IMF documents as well, the government is still significantly slow and incomplete in operationalizing and adequately structuring the expected anti-corruption initiatives including implementation of the new Anti-Corruption Act. The IMF has now reclassified some of these actions as Structural Benchmarks.
By these failures, the government has signaled that it will under-deliver or renege on anti-corruption commitments if there is space within the program to do so. The IMF by classifying commitments as “Prior Actions” (PAs) or as “Structural Benchmarks” (SBs) can signal very serious concern. While several of the failed governance-related actions have been reclassified as SBs, the opportunity to signal urgency by classifying them as PAs has been missed, even when actions were overdue by over 6 months.
As the government continues to make momentous decisions on behalf of the people of Sri Lanka, the CSI Core Group calls upon the government to rethink its recalcitrant approach to the anti-corruption reform agenda, and the IMF to consider the consequences of the signaling effect of not classifying failed actions as PAs in the renewal of the current program, and not categorizing all significant anti-corruption actions as SBs.
The CSI Core Group welcomes the Governance Diagnostic Assessment published by the IMF and the IMF commitment to ensure that identified actions will be fully included within the program in the future. While acknowledging that limited movement has been made on governance reform, the CSI Core Group calls upon the Government to show good faith progress on the same as the representatives of the people, without being guided merely by external demand.
ආර්ථිකය යළි ගොඩනැගීමට අත්යාවශ්ය දූෂණ විරෝධී ප්රතිසංස්කරණවල ප්රගතියක් නොමැතිවීම පිළිබඳව රටේ ප්රමුඛ සිවිල් සමාජ සංවිධාන සිය අවධානය යොමු කරයි.
ජාත්යන්තර මූල්ය අරමුදලේ (IMF) විධායක මණ්ඩලය ශ්රී ලංකාව සමඟ මාස 48ක කාලයකට ඇති කර ගත් විස්තීරණ ණය පහසුකම යටතේ වන පළමු සමාලෝචනය පසුගිය සතියේ අවසන් කර, ශ්රී ලංකාවට විශේෂ ගැනුම් හිමිකම් (Special Drawing Rights) යටතේ මිලියන 254ක් (ඇමරිකානු ඩොලර් මිලියන 330 ක් පමණ) ලබා දීමට එකඟතාවය පළ කළ කිරීම පිළිබඳව “ආර්ථික ප්රගමනය උදෙසා වූ දූෂණ විරෝධී ප්රතිසංස්කරණ පිළිබඳ සිවිල් සමාජ එකතුව” ලෙස අපි අවධානය යොමු කිරීමට කැමැත්තෙමු. ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රි ලංකා ආයතනය නායකත්වය ගෙන පිහිටුවා ඇති මෙම සිවිල් සමාජ එකතුවේ මූලික කණ්ඩායමට නිදහස් හා සාධාරණ මැතිවරණයන් සඳහා ජනතා ක්රියාකාරීත්වය (පැෆ්රල්), විකල්ප ප්රතිපත්ති කේන්ද්රය, සර්වෝදය ශ්රමදාන ව්යාපාරය, වෙරිටේ රිසර්ච් ආයතනය සහ ජාතික සාම මණ්ඩලය අයත් වේ.
ශ්රී ලංකාවේ ආර්ථිකය යථාවත් කිරීම සඳහා රාජ්යකරණයට සහ දූෂණයට එරෙහි ප්රතිසංස්කරණ අත්යවශ්ය බව සිවිල් සමාජ එකතුවේ මූලික කණ්ඩායම ලෙස අපි නැවත මතක් කර සිටිමු. ශ්රී ලංකාවේ සිවිල් සමාජ සංවිධාන එකතුව මෙන්ම IMF ආයතනය විසින්ද නිකුත් කර ඇති රාජ්යකරණ විශ්ලේෂණ වාර්තාවන්හි ද මෙම ප්රතිසංස්කරණ ක්රියාත්මක කිරීම අත්යාවශ්ය බව පෙන්වා දී ඇත. මෙම ප්රතිසංස්කරණවලට ප්රමාණවත් ප්රමුඛතාවයක් ලබා නොදෙන්නේ නම් ඉදිරි වසර පහ තුළ ශ්රී ලංකාව නැවතත් ණය අර්බුදයකට ලක් වීමට ඉඩ ඇත.
IMF ආයතනය ශ්රී ලංකාව සමඟ ගෙන යන වැඩසටහනේ රාජ්යකරණයේ සිදු විය යුතු ප්රතිසංස්කරණ යෝජනා කිරීම පිළිබඳව සිවිල් සමාජ සංවිධාන ප්රසාදය පළ කරයි. කෙසේ වෙතත්, සිවිල් සමාජ සංවිධාන පෙන්වා දෙන්නේ වත්මන් IMF වැඩසටහනෙහි සඳහන් විනිවිදභාවය සහ දූෂණ විරෝධය සම්බන්ධයෙන් වන මූලික එකඟතාවයන් පවා ක්රියාත්මක කිරීමට රජය තවමත් අපොහොසත් වී ඇති බවයි.
උදාහරණයක් ලෙස, මහා පරිමාණ රාජ්ය ප්රසම්පාදන කොන්ත්රාත්තු සහ විවිධ නීති හරහා බදු නිදහස් කිරීම් ලබන ව්යාපෘති පිළිබඳ තොරතුරු මාර්ගගත වේදිකාවක් ඔස්සේ 2023 මාර්තු මස අවසානය වන විට ප්රකාශයට පත් කිරීමට රජය IMF වැඩසටහන යටතේ එකඟ වී ඇති නමුත් මේ වන තෙක් එය ඉටු කර නැත. නව දූෂණ විරෝධී පනත ක්රියාත්මක කිරීම ඇතුළුව එකඟ වී ඇති දූෂණ විරෝධී ප්රතිසංස්කරණ ක්රියාත්මක කිරීමේදී සහ ඒවා නිසි පරිදි ව්යුහගත කර ගැනීමේදී රජය ඉතා මන්දගාමී සහ අසම්පූර්ණ වන බව ජාත්යන්තර මූල්ය අරමුදල ද සිය ලේඛනවල සඳහන් කර ඇත. IMF ආයතනය මෙම ප්රතිසංස්කරණවලට අදාළ ක්රියාකාරකම් වලින් කිහිපයක් “ව්යුහාත්මක මිණුම්” ලෙස නැවත වර්ගීකරණය කර ඇත.
IMF වැඩපිළිවෙල තුළ අවස්ථාවක් ලැබෙන්නේ නම්, එකඟ වී ඇති දූෂණ විරෝධී ක්රියාකාරකම් නොතකා හැරීමට හෝ ඒවා නිසි පරිදි ඉටු නොකිරීමට රජය පෙළඹෙන බව මේ තුළින් අපට පෙනී යන කරුණයි. රජය විසින් එකඟ වී ඇති ක්රියාකරකම් “පූර්ව ක්රියා” (Prior Actions) හෝ “ව්යුහාත්මක මිණුම්” (Structural Benchmarks) ලෙස IMF ආයතනය මගින් නැවත වර්ගීකරණය කර ඇති ආකාරය ගැටළු සහගත වේ. මෙම වර්ගීකරණයේදී, රාජ්යකරණයට අදාළ මේ වන තෙක් ඉටු නොකළ ක්රියාමාර්ග කිහිපයක් ව්යුහාත්මක මිණුම් ලෙස දක්වා ඇත. මාස 6කට වැඩි කාලයක් තිස්සේ ප්රමාද වී ඇති මෙම ක්රියාකරකම්, පූර්ව ක්රියා ලෙස වර්ගීකරණය කළා නම් කඩිනමින් ඉටු කල යුතුව තිබූ ප්රතිසංස්කරණ, සම්පූර්ණ කළ යුතු බව රජයට දැන්වීමට ලද අවස්ථාව මේ නිසා මග හැරී තිබේ.
ශ්රී ලාංකීය ජනතාව වෙනුවෙන් රජය විසින් මේ මොහොතේ තීරණාත්මක තීරණ ගනු ලබමින් සිටියි. ඒ නිසා, සිවිල් සමාජ එකතුවේ මූලික කණ්ඩායම ලෙස අප රජයෙන් ඉල්ලා සිටින්නේ දූෂණ විරෝධී ප්රතිසංස්කරණ ක්රියාත්මක කිරීමේ න්යාය පත්රයට සහයෝගය නොදෙන පසුගාමී ප්රවේශය පිළිබඳව නැවත සිතා බලන ලෙසයි. එමෙන්ම, අප IMF ආයතනය වෙතින් ඉල්ලා සිටින්නේ, ශ්රී ලංකාව සමඟ ඇති වැඩසටහන සමාලෝචනයෙන් පසු දීර්ඝ කිරීමේදී, මෙතෙක් ඉටු නොකළ ක්රියා ඇත්නම් ඒවා පූර්ව ක්රියා ලෙස වර්ගීකරණය නොකිරීමත්, සියලුම වැදගත් දූෂණ විරෝධී ක්රියාකාරකම් ව්යුහාත්මක මිණුම් ඉලක්ක ලෙස වර්ගීකරණය නොකිරීමත් නිසා ඇති වන ප්රතිවිපාක පිළිබඳව සලකා බලන ලෙසයි.
IMF ආයතනය විසින් ප්රකාශයට පත් කරන ලද රාජ්යකරණ විශ්ලේෂණ වාර්තාව සහ එහි දැක්වෙන ප්රතිසංස්කරණවලට අදාළ ක්රියාකාරකම් සියල්ල IMF වැඩසටහනට ඉදිරියේදී ඇතුළත් කිරීමට IMF ආයතනය දක්වන උනන්දුව සම්බන්ධයෙන් සිවිල් සමාජ එකතුවේ මූලික කණ්ඩායම සතුට පළ කරයි. මේ වන විට රාජ්යකරණ ප්රතිසංස්කරණ සම්බන්ධයෙන් ශ්රී ලංකාව ලබා ඇත්තේ සීමිත ප්රගතියක් පමණි. එනිසා, අප රජයෙන් ඉල්ලා සිටින්නේ, හුදෙක් බාහිර බලපෑම් නිසාම පමණක් නොව,මහජන නියෝජිතයන් ලෙස සද්භාවයෙන් රාජ්යකරණ ප්රතිසංස්කරණ සම්බන්ධයෙන් කටයුතු කරන ලෙසයි.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்களில் முன்னேற்றமின்மை குறித்து நாட்டின் முன்னணி சிவில் சமூக அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.
கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையானது, 48 மாத காலத்திற்கு இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதல் மதிப்பாய்வை நிறைவுசெய்து, சிறப்பு வரைதல் உரிமைகளின் (Special Drawing Rights) கீழ் இலங்கைக்கு 254 மில்லியனை (சுமார் 330 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்க ஒப்புக்கொண்டுள்ள செய்தியை “பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூக கூட்டமைப்பான” நாங்கள் கவனத்தில் கொள்ள விரும்புகிறோம். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்காவின் (TISL) தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த சிவில் சமூகக் கூட்டமைப்பின் முக்கிய குழுவில் ‘வெரிடே ரிசேர்ச்’ அமைப்பு, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA), சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL), சர்வோதய அமைப்பு மற்றும் தேசிய சமாதானப் பேரவை (NPC) ஆகியவை அடங்கும்.
சிவில் சமூகக் கூட்டமைப்பின் முக்கிய குழு என்ற வகையில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசாங்க மற்றும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் இன்றியமையாதவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இலங்கையின் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கைகளில் இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களுக்கு போதிய முன்னுரிமை வழங்கப்படாவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இலங்கை மீண்டும் கடன் நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் அரசாங்கத்தின் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுக்கு சிவில் சமூக அமைப்புகள் தங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலுக்கு எதிரான அடிப்படை உடன்படிக்கைகளை கூட அரசாங்கம் இன்னும் நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
உதாரணமாக, IMF திட்டத்தின் கீழ், பாரியளவிலான பொது கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு சட்டங்களின் மூலம் வரி விலக்குத் திட்டங்கள் பற்றிய தகவல்களை ஆன்லைன் தளத்தின் மூலம் மார்ச் 2023 இறுதிக்குள் வெளியிட அரசாங்கம் ஒப்புக்கொண்டது, ஆனால் இன்னும் அவ்வாறு செய்யவில்லை.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்துவது உட்பட, ஒப்புக் கொள்ளப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதிலும், முறையாகக் கட்டமைப்பதிலும் அரசாங்கம் மெதுவாகவும், முழுமையடையாமல் இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் தனது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் IMF இப்போது இந்த சீர்திருத்தம் தொடர்பான சில செயல்பாடுகளை “கட்டமைப்பு இலக்குகள்” என மீண்டும் வகைப்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் ஒரு இடம் பெறுவதென்றால், ஒப்புக்கொள்ளப்பட்ட ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் புறக்கணிக்க அல்லது சரியாகச் செய்யாமல் இருக்கத் தூண்டுகிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது. அரசாங்கம் ஒப்புக்கொண்ட செயல்களை “முன் செயல்கள்” அல்லது “கட்டமைப்பு வரையறைகள்” என IMF மீண்டும் அதை வகைப்படுத்தும் விதம் சிக்கலாக உள்ளது.
இந்த வகைப்படுத்தலில், நிர்வாகத்துடன் தொடர்புடைய இதுவரை நிறைவேற்றப்படாத பல நடவடிக்கைகள் கட்டமைப்பு இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 6 மாதங்களுக்கும் மேலாகத் தாமதமாகி வரும் இந்தச் செயற்பாடுகள் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளாக வகைப்படுத்தப்பட்டால் விரைவாகச் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கும் சந்தர்ப்பம் இதனால் தவறிவிட்டது.
அரசாங்கம் தற்போது இலங்கை மக்களுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது. எனவே, சிவில் சமூகக் அமைப்புகளின் முக்கிய குழுவாக, ஊழலுக்கு எதிரான சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கு ஆதரவளிக்காது பிடிவாதமான/புறக்கணிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பரிசீலனைக்குப் பின்னர் இலங்கையுடன் சர்வதேச நாணய நிதியத்தின் IMF திட்டத்தை விரிவுபடுத்தும்போது, இன்னும் நிறைவேற்றாத நடவடிக்கைகளை முன் நடவடிக்கைகளாக வகைப்படுத்தாதது மற்றும் அனைத்து முக்கியமான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கட்டமைப்பு இலக்குகளாக வகைப்படுத்தாததன் விளைவுகளை கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்துகிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் IMF வெளியிடப்பட்ட ஆளுகை பகுப்பாய்வு அறிக்கை மற்றும் எதிர்காலத்தில் IMF திட்டத்தில் அனைத்து சீர்திருத்தம் தொடர்பான செயல்பாடுகளையும் இணைக்க IMF இன் ஆர்வம் குறித்து சிவில் சமூக கூட்டமைப்பின் முக்கிய குழு மகிழ்ச்சியடைகிறது. இதுவரை, அரசியல்மயமாக்கல் சீர்திருத்தங்களைப் பொறுத்த வரையில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் மட்டுமே காணப்படுகிறது. அந்தவகையில், வெளி அழுத்தங்களினால் மட்டும் அல்லாமல், மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் நல்லெண்ணத்துடன், நிர்வாக சீர்திருத்தங்களில் உண்மையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.