Skip links

TISL Challenges the Companies (Amendment) Bill

Transparency International Sri Lanka (TISL) filed legal action on Friday the 13th of September in the Supreme Court challenging the Bill issued on 06th August 2024 to amend the Companies Act No. 07 of 2007.

The amendment introduced a much-needed anti-corruption tool to Sri Lanka’s legal framework – a Beneficial Ownership register. A publicly accessible beneficial ownership register creates a legal requirement for companies to disclose the identities of individuals who ultimately own or effectively control them and benefit from their returns. This transparency is crucial in combating corruption, conflicts of interest for public officials, money laundering and terrorist-financing, as it enables to trace and expose hidden financial activities and illicit enrichment. Beneficial ownership registries are also vital for the effective implementation of crucial laws such as the upcoming Proceeds of Crime Act.

Despite this welcome introduction, there are serious concerns over the efficacy of such a register, given the manner in which the Bill is drafted. It is vital that the Beneficial Ownership register is effective and transparent and not merely superficial. Without universal applicability, loopholes are created that undermine the entire purpose of the register. If certain companies are exempt or vital information is hidden, the register loses its effectiveness, allowing illegal activities to continue unchecked, thereby defeating the purpose of the objectives of the introduction of beneficial ownership law.

Challenging the said serious concerns, TISL’s petition points out that Section 130A (10) of the Bill exempts Offshore Companies incorporated outside Sri Lanka and registered under the Companies Act or overseas companies registered under the Companies Act from disclosing beneficial ownership information, where such companies are required to comply with the beneficial ownership registration in the respective countries of incorporation.

Exempting offshore and overseas companies from disclosing Beneficial Ownership information enables and encourages the establishment of shell companies (inactive companies created for fraudulent purposes such as money laundering), which are used as vehicles for corruption and illicit gain. Furthermore, this does not necessarily ensure that such overseas companies have registered in compliance with the Beneficial Ownership registration requirements in the respective countries. Moreover, such an exemption undermines transparency and increases the risk of conflicts of interest as Beneficial Ownership information is not widely available through the Registrar of Companies. Additionally, it requires less information from companies where the beneficial and legal owners differ, a distinction that has no reasonable connection to the internationally accepted purpose of beneficial ownership registration. TISL notes that this provision, not only undermines transparency and accountability but limits legal avenues available to prevent and deter corrupt business practices.

The petition states that this exemption creates a discriminatory classification between offshore companies, overseas companies, and other local companies, violating the fundamental right to equal protection of the law (Article 12(1) of the Constitution, as only domestic companies are subjected to disclosure requirements.

TISL further notes in the petition that Section 130D allows details of the beneficial owners of a company to be made available to the public, only upon a request for inspection by a member of the public, and the details of the beneficial owners of the company have been limited to their full names and the nature and extent of Beneficial Ownership of the company.

Information relating to beneficial owners of a company should be publicly accessible to ensure the effective implementation of the registry. Proactive disclosure of the beneficial owners of companies will not only reduce the risk of corruption but will also promote fair competition by revealing connections between companies that might otherwise be hidden. Beneficial Ownership transparency aids citizens, journalists and civil society to identify true owners of companies whereby the risk of exposure deters illegal activities. Additionally, it helps improve investor confidence by ensuring that companies are operating transparently and helps licit businesses avoid unknowingly engaging in fraudulent activity.

In its petition, TISL also raises the concern that Article 14A of the Constitution – the Right to Access Information is hindered by this Bill. By limiting the disclosure of beneficial ownership details to only names and ownership extent, Section 130D fails to provide the public with sufficient information to exercise their right to access meaningful information.

Both the Civil Society Governance Diagnostic Report of Sri Lanka and the IMF-supported Governance Diagnostic Assessment of Sri Lanka recommend to the government to implement a publicly accessible Beneficial Ownership registry. The IMF Governance Diagnostic recommendation to finalise and implement regulations to support the provision of beneficial ownership information as required by the Companies Act and to establish a public beneficial ownership registry is now converted to an actionable point in a Government Action Plan mandated in the most recent IMF review agreement that was signed in June 2024.

The petition requests the Supreme Court to determine that Clause 7 of the Bill is inconsistent with, and/or violates, Article 12(1) and Article 14A of the Constitution that enshrines the Right to Equal Protection of the Law and Right of Access to Information, and therefore, for it to be passed into law only if approved by a two-thirds majority vote of all members of Parliament, as required by Article 84(2) of the Constitution. TISL has filed this petition in the public interest, naming the Attorney General as the respondent.

The case was taken up yesterday (Wednesday, 18th September 2024) and today.

Read full petition.

TISL ආයතනය විසින් සමාගම් (සංශෝධන) පනත් කෙටුම්පත අභියෝගයට ලක් කරයි.

2007 අංක 07 දරන සමාගම් පනත සංශෝධනය කිරීම සඳහා 2024 අගෝස්තු 06 වැනි දින නිකුත් කරන ලද පනත් කෙටුම්පත අභියෝගයට ලක් කරමින් ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය (TISL) විසින් සැප්තැම්බර් 13 වැනි සිකුරාදා ශ්‍රේෂ්ඨාධිකරණය හමුවේ නඩුවක් ගොනු කරන ලදී.

මෙම සංශෝධනය මගින් ශ්‍රී ලංකාවේ නීතිමය රාමුවට බෙහෙවින් අවශ්‍ය වූ දූෂණ විරෝධී මෙවලමක් වන ‘අර්ථලාභී අයිතිය පිළිබඳ ලේඛනයක්’ (Beneficial Ownership Register) හඳුන්වා දී ඇත. අර්ථලාභී අයිතිය පිළිබඳ ලේඛනය මගින් සමාගම් වල ලාබාංශ ආදියෙන් ප්‍රතිලාභ ලබන නියම හිමිකරුවන් හෝ ඒවායේ පාලනය හසුරුවන පුද්ගලයින්ගේ අනන්‍යතා හෙළිදරව් කිරීම අවශ්‍ය වනු ඇත. දූෂණයට එරෙහිව සටන් කිරීමේදී මෙම විනිවිදභාවය ඉතා වැදගත් වේ. මුදල් විශුද්ධිකරණය, ත්‍රස්තවාදයට මුදල් ගලා යෑම සහ රාජ්‍ය නිලධාරීන්ගේ බැඳියාවන් අතර ගැටුම් ආදියට එරෙහිව කටයුතු කිරීමට මෙම ලේඛනය උපකාරී වනු ඇත. එමඟින් සැඟවුණු මූල්‍ය ක්‍රියාකාරකම් සහ අයුතු ලෙස අදායම් ඉපයීම් පිළිබඳ සොයා ගැනීමට සහ හෙළිදරව් කිරීමට හැකි වේ. ඉදිරියේදී හඳුන්වා දීමට නියමිත අපරාධ වලින් උපයා ගත් දේපළ පිළිබඳ පනත වැනි තීරණාත්මක නීති ඵලදායි ලෙස ක්‍රියාත්මක කිරීම සඳහා අර්ථලාභී අයිතිය පිළිබඳ ලේඛන වැදගත් වනු ඇත.

කෙසේ වුවද, ඉදිරිපත් කර ඇති පනත් කෙටුම්පත අනුව සකස් කරන අර්ථලාභී අයිතිය පිළිබඳ ලේඛනයක ඇති ඵලදායීතාවය පිළිබඳ බරපතල ගැටලු මතු වෙයි. හුදෙක් නිෂ්ඵල වෑයමක් නොවීමට නම් අර්ථලාභී අයිතිය පිළිබඳ ලේඛනය විනිවිදභාවයෙන් යුක්ත වීම අවශ්‍ය වේ. ගෝලීයව නිසි පිළිගැනීමක් නොලැබෙන්නේ නම්, මෙම ලේඛනය හඳුන්වා දීමේ අරමුණ අඩපණ විය හැක. ඇතැම් සමාගම් නිදහස් කර ඇත්නම් හෝ වැදගත් තොරතුරු සඟවා තිබේ නම්, ලේඛනය ඵලදායී නොවේ. නීති විරෝධී ක්‍රියාකාරකම් දිගටම කරගෙන යාමට එමඟින් ඉඩ සැලසේ. එනිසා අර්ථලාභී අයිතිය පිළිබඳ නීතිය හඳුන්වාදීමේ අරමුණ පරාජය වේ.

TISL ආයතනය ඉදිරිපත් කළ පෙත්සම පෙන්වා දෙන්නේ, පනත් කෙටුම්පතේ 130 අ (10) වගන්තිය මගින් සමාගම් පනත යටතේ ලියාපදිංචි වී ඇති අක්වෙරළ සමාගම් හෝ විදේශීය සමාගම් අර්ථලාභී අයිතිය පිළිබඳ තොරතුරු හෙළිදරව් කිරීමෙන් නිදහස් කර ඇති බවයි. එවැනි සමාගම් අර්ථලාභී අයිතිය සම්බන්ධයෙන් අදාළ රටවල ලියාපදිංචි වීම පමණක් ප්‍රමාණවත් වේ.

අර්ථලාභී අයිතිය පිළිබඳ තොරතුරු හෙළිදරව් කිරීමට වන නීතිමය බැඳීමෙන් අක්වෙරළ සහ විදේශීය සමාගම් නිදහස් කිරීම මගින් ෂෙල් සමාගම් (මුදල් විශුද්ධිකරණය වැනි වංචනික අරමුණු සඳහා නිර්මාණය කරන ලද අක්‍රිය සමාගම්)  පිහිටුවීම දිරිමත් කරයි. තවද, එවැනි විදේශීය සමාගම් අදාළ රටවල අර්ථලාභී අයිතිය සම්බන්ධයෙන් නිසැකවම ලියාපදිංචි වී ඇති බව මින් කිව නොහැක.

සමාගම් රෙජිස්ට්‍රාර්වරයා හරහා අර්ථලාභී අයිතිය පිළිබඳ වැඩිදුර තොරතුරු ලබා ගැනීම පහසු නොවන තත්ත්වයක් යටතේ මෙවැනි නිදහස් කිරීම් මගින් විනිවිදභාවය අඩපණ කර බැඳියාවන් අතර ගැටුම් ඇතිවීමේ අවදානම වැඩි කරයි.

ඊට අමතරව, අර්ථලාභී සහ නීත්‍යානුකූල හිමිකරුවන් වෙනස් වන සමාගම්වලින් ඉල්ලා ඇත්තේ අඩු තොරතුරු ප්‍රමාණයකි. මෙම තත්ත්වය අර්ථලාභී අයිතිය ලියාපදිංචි කිරීම සම්බන්ධයෙන් ජාත්‍යන්තරව බලාපොරොත්තු වන අරමුණට එකඟ නොවේ. එය විනිවිදභාවය සහ වගවීම යටපත් කරන අතර දූෂිත ව්‍යාපාරික භාවිතයන් වැළැක්වීමට සහ අධෛර්යමත් කිරීමට ඇති නීතිමය හැකියාව සීමා කරන බව TISL ආයතනය සඳහන් කරයි.

අර්ථලාභී අයිතිය හෙළිදරව් කිරීමේ ප්‍රතිපාදනයන් අදාළ වන්නේ දේශීය සමාගම් වලට පමණක් වන බැවින්, නීතියේ සමාන ආරක්ෂාව සඳහා වන මූලික අයිතිවාසිකම [ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 12 (1)] මේ හරහා උල්ලංඝනය වී ඇති බව  පෙත්සමෙහි දැක්වෙයි.

පනත් කෙටුම්පතේ 130 ඈ වගන්තිය අනුව, සමාගමක අර්ථලාභී අයිතිකරුවන් පිළිබඳ තොරතුරු මහජනතාවට ලබා දෙන්නේ යම් පුරවැසියෙක් එවැනි ඉල්ලීමක් කරන්නේ නම් පමණි. එලෙස ලබා ගත හැකි තොරතුරු සමාගමේ අර්ථලාභී අයිතිකරුවන්ගේ සම්පූර්ණ නම්,  සහ අර්ථලාභී අයිතිකාරිත්වයේ ස්වභාවය සහ ප්‍රමාණය යනාදියට සීමා කර ඇත. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 14අ මගින් තහවුරු කර ඇති තොරතුරු වෙත ප්‍රවේශ වීමේ අයිතියට මෙම පනත් කෙටුම්පතේ 130 ඈ වගන්තිය මගින් බාධා සිදු වන බව TISL ආයතනය පෙන්වා දෙයි.

අර්ථලාභී අයිතිය පිළිබඳ ලේඛනය නිසි පරිදි ක්‍රියාත්මක වීමට නම් එහි සඳහන් තොරතුරු වලට මහජන ප්‍රවේශය තිබිය යුතුය. සමාගම්වල අර්ථලාභී අයිතිකරුවන් ප්‍රගාමීව හෙළිදරව් කිරීම දූෂණ අවදානම අඩු කරයි. සමාගම් අතර සැඟවී පවතින සම්බන්ධතා හෙළිදරව් වීම වෙළඳපොළ සාධාරණ තරඟකාරිත්වයකටද හේතු වේ.

අර්ථලාභී අයිතිය පිළිබඳ විනිවිදභාවයක් පවත්වා ගැනීම පුරවැසියන්ට, මාධ්‍යවේදීන්ට සහ සිවිල් සමාජයට සමාගම්වල සැබෑ හිමිකරුවන් හඳුනා ගැනීමට උපකාරී වේ. මේ නිසා නීති විරෝධී ක්‍රියාකාරකම් අධෛර්යමත් කෙරේ. සමාගම්වල විනිවිදභාවය වැඩි දියුණු කිරීම හරහා ආයෝජක විශ්වාසය වැඩි වන අතර ඔවුන් වංචනික ක්‍රියාකාරකම්වල නොදැනුවත්වම යෙදීම වළක්වා ගත හැකිය.

මහජන ප්‍රවේශය සහිත අර්ථලාභී අයිතිය පිළිබඳ ලේඛනයක් සකස් කිරීමට ශ්‍රී ලංකාවේ රාජ්‍යකරණය පිළිබඳ සිවිල් සමාජ විශ්ලේෂණ වාර්තාව සහ ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ (IMF) සහාය ඇතිව සිදු කළ ශ්‍රී ලංකාවේ රාජ්‍යකරණය පිළිබඳ තක්සේරුව යන වාර්තා දෙකෙන්ම රජයට නිර්දේශ කර ඇත. 2024 ජූනි මාසයේදී අත්සන් කරන ලද IMF සමාලෝචන ගිවිසුම අනුව සකස් කළ රජයේ ක්‍රියාකාරී සැලැස්මටද මෙය ඇතුළත් කර ඇත.

පනත් කෙටුම්පතේ 7 වැනි වගන්තිය ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 12(1) සහ 14අ ව්‍යවස්ථාවන් උල්ලංඝනය කරන බවට වූ ශ්‍රේෂ්ඨාධිකරණ තීරණයක් ලබා දෙන ලෙස පෙත්සම මගින් ඉල්ලා ඇත. මෙම කෙටුම්පත සම්මත කළ හැක්කේ පාර්ලිමේන්තුවේ සියලුම මන්ත්‍රීවරුන්ගේ තුනෙන් දෙකක බහුතර ඡන්දයකින් පමණක් බව නියම කරන ලෙසද පෙත්සමෙන් ඉල්ලා ඇත.

TISL ආයතනය විසින් මහජන සුබසිද්ධිය සඳහා ගොනු කර ඇති මෙම පෙත්සමෙහි වගඋත්තරකරු ලෙස නීතිපතිවරයා නම් කර ඇත. මෙම නඩුව ඊයේ (2024 සැප්තැම්බර් 18 බදාදා) සහ අද කැඳවනු ලැබීය.

සම්පූර්ණ පෙත්සම කියවන්න.

கம்பனிகள் (திருத்தம்) சட்டமூலத்தை TISL சவாலுக்குட்படுத்துகிறது

2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துவதற்காக 2024 ஆகஸ்ட் 06 அன்று வெளியிடப்பட்ட சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமையன்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.

இந்தத் திருத்தத்தின் மூலம் இலங்கையின் சட்டக் கட்டமைப்பிற்கு மிகவும் தேவையான ஊழல் எதிர்ப்பு கருவியொன்றான ‘நலன்பெறும் உரிமையாளர்களின் பதிவு’ (Beneficial Ownership Register) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நலன்பெறும் உரிமையாளர்களின் பதிவுகள் ஊடாக நிறுவனங்களின் பங்கிலாபங்களில் உரிமையைப் பெரும் உரிமையாளர்கள் அல்லது அவற்றின் கட்டுப்பாட்டை கையாளும் நபர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் தேவை ஏற்படுகின்றது. ஊழலை எதிர்த்துப் போராடுவதில் இந்த வெளிப்படைத்தன்மை முக்கியமானது. பணத் தூய்தாக்கல், பயங்கரவாதத்துக்கான நிதி ஓட்டம் மற்றும் அரச அதிகாரிகளின் அக்கறை முரண்பாடுகள் என்பவற்றுக்கு எதிராக செயற்படுவதற்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதனால் மறைக்கப்பட்ட நிதி நடவடிக்கைகள் மற்றும் முறையற்ற விதத்தில் வருமானமீட்டுதல் தொடர்பில் கண்டறிவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் முடியும். எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள குற்றச் செயல்களால் ஈட்டப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பான சட்டம் போன்ற முக்கியமான சட்டங்களை வினைத்திறனாக செயல்படுத்துவதற்கு நலன்பெறும் உரிமையாளர்களின் பதிவுகள் இன்றியமையாதவை.

எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு அமைய தயாரிக்கப்படும் நலன்பெறும் உரிமையாளர்களின் பதிவில் உள்ள வினைத்திறன் தொடர்பில் கடுமையான சிக்கல்கள் எழுகின்றன. இது வெறுமனே பயனற்ற முயற்சியாக இல்லாமல் இருப்பதற்கு நலன்பெறும் உரிமையாளர்களின் பதிவு வெளிப்படைத்தன்மையுடன் காணப்படுவது அவசியமாகும். ஒரு சில நிறுவங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டால் அல்லது தகவல்களை மறைத்திருந்தால் பதிவு பயனற்றதாகும். இதன்மூலம் சட்டவிரோத செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்வதற்கு இடமளிக்கப்படும். அதனால் நலன்பெறும் உரிமையாளர்கள் தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கம் தோற்கடிக்கப்படும்.

சட்டமூலத்தின் 130 அ (10) பிரிவின் மூலம் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கரைகடந்த கம்பனிகள் அல்லது வெளிநாட்டு கம்பனிகள் நலன்பெறும் உரிமையாளர்களின் தகவல்களை வெளிப்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக TISL முன்வைத்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வாறான கம்பனிகள் நலன்பெறும் உரிமையாளர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் பதிவு செய்யப்படுவது மாத்திரம் போதுமானது.

நலன்பெறும் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதிலிருந்து கரைகடந்த மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளை விடுவித்திருப்பது ஷெல் கம்பனிகள் (பணத் தூய்தக்கால் போன்ற மோசடி நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட செயலற்ற கம்பனிகள்) உருவாக்கப்படுவதை ஊக்குவிக்கும். அத்துடன், அத்தகைய வெளிநாட்டுக் கம்பனிகள் சம்பந்தப்பட்ட நாடுகளில் நலன்பெறும் உரிமையாளர்கள் தொடர்பில் உண்மையாகவே பதிவு செய்துள்ளனவா என்பதை இதனால் கூற முடியாது.

கம்பனிகளின் பதிவாளர் மூலம் நலன்பெறும் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை இலகுவாகப் பெறுவது முடியாத நிலைமையில், இவ்வாறான விடுவிப்புக்கள் வெளிப்படைத் தன்மையை முடக்கி அக்கறைகளில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் எச்சரிக்கையை அதிகரிக்கிறது.

அது மாத்திரமன்றி, நலன்பெறும் மற்றும் சட்டபூர்வ உரிமையாளர்கள் வேறுபடும் கம்பனிகளிடமிருந்து குறைவான தகவல்களே கோரப்பட்டுள்ளது. இது நலன்பெறும் உரிமையாளர்களை பதிவு செய்வது தொடர்பான சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படும் நோக்கத்துடன் இணங்குவதில்லை. இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், ஊழல் வணிக நடைமுறைகளைத் தடுப்பது மற்றும் அதைரியப்படுத்துவதற்குக் காணப்படும் சட்டரீதியான இயலுமையை கட்டுப்படுத்துவதாக TISL குறிப்பிடுகிறது.

நலன்பெறும் உரிமையை வெளிப்படுத்தும் ஏற்பாடுகள் உள்நாட்டுக் கம்பனிகளுக்கு மாத்திரம் சம்பந்தப்படுவதால், சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை [அரசியலமைப்பின் 12 (1)]  இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டமூலத்த்தின் 130 ஈ பிரிவுக்கு அமைய, ஒரு கம்பனியின் நலன்பெறும் உரிமையாளர்களின் விபரங்களைப் பொதுமக்களுக்கு வழங்குவது, ஏதாவதொரு பிரஜை அவ்வாறான கோரிக்கையை மேற்கொள்வதாக இருந்தால் மாத்திரமேயாகும். அவ்வாறு பெற்றுக்கொள்ளக்கூடிய விபரங்கள் கம்பனியின் நலன்பெறும் உரிமையாளர்களின் முழுப் பெயர்கள், நலன்பெறும் உரிமையின் தன்மை மற்றும் அளவு ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 14 அ மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களைப்பெற அணுகுவதற்கான உரிமைக்கு இந்த சட்டமூலத்தின் 130 ஈ பிரிவின் மூலம் தடை ஏற்படுவதாக TISL நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.

நலன்பெறும் உரிமையாளர்களின் பதிவு உரிய முறையில் செயற்பட வேண்டுமானால், அதிலுள்ள தகவல்களுக்கு பொதுமக்கள் அணுகல் இருத்தல் வேண்டும். கம்பனிகளின் நலன்பெறும் உரிமையாளர்களை முன்கூட்டியே வெளிப்படுத்துவது ஊழல் அபாயத்தைக் குறைக்கின்றது. கம்பனிகளுக்கிடையில் மறைக்கப்பட்டுக் காணப்படும் தொடர்புகள் வெளிப்படுத்தப்படுவது சந்தையில் சமநிலையான போட்டித்தன்மைக்குக் காரணமாகும்.

நலன்பெறும் உரிமைகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவது பிரஜைகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களை அடையாளம் காண உதவுகிறது. இதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் அதைரியப்படுத்தப்படுகிறன. கம்பனிகளின் வெளிப்படைதன்மை மேம்படுத்தப்படுவதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பதுடன், அவர்கள் மோசடிச் செயற்பாடுகளில் அறியாமலே ஈடுபடுவதைத் தவிர்க்க முடியும்.

பொதுமக்கள் அணுகலுடன் கூடிய நலன்பெறும் உரிமையாளர்கள் பதிவை தயாரிப்பதற்கு, இலங்கையின் ஆட்சிமுறை தொடர்பான சிவில் சமூக ஆய்வறிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் ஆட்சிமுறை மதிப்பீடு ஆகிய இரண்டு அறிக்கைகளும் அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கின்றன. 2024 ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட IMF மீளாய்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் செயற்பாட்டுத் திட்டத்திலும் இது உள்வாங்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின் 7 ஆவது பிரிவு அரசியலமைப்பின் 12 (1) உறுப்புரை மற்றும் 14 அ உறுப்புரையை மீறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமாறு மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மூலம் மாத்திரமே இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என கட்டளையிடுமாறும் மனுவின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TISL நிறுவனத்தினால் பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024) மற்றும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை இங்கே பார்வையிடலாம்

This website uses cookies to improve your web experience.