Skip links

Statement on ongoing suppression of civic activism

TISL unequivocally condemns the arrests and oppression of citizens who raised their voices in peaceful protests to challenge those responsible for the country’s governance. TISL also denounces the destruction of public property that belongs to all citizens, under any circumstance.

TISL observes with concern that the Prevention of Terrorism Act (PTA) and provisions of other laws are being misused arbitrarily and without reasonable suspicion to arrest and question citizens who took a stand for a corruption-free country.

Such arbitrary application of the law creates a chilling effect and discourages citizens from exercising democratic rights, leading to dire consequences for Sri Lanka. Arrests and questioning that are sanctioned only under the temporary provisions of the PTA, disregarding the constitutionally- enshrined freedom of expression, freedom of association and freedom of assembly, can be viewed as a misuse of the executive and state powers that should be used for the well-being of citizens and not against them.

Every citizen is equal in the eyes of the law, and the law should not be used as a weapon to suppress legitimate political dissent. At present, the application of the law cannot be viewed as equal when those accused of high-level corruption roam free while others are dealt with the full force of anti-terrorism laws. TISL emphasizes that the Executive should be accountable to ensure equality of all citizens before the law.

TISL stands with the citizens and civil society activists who raised their voices within legal bounds to eliminate corruption for true systemic change. TISL urges the President and the government to revoke detention orders and to take immediate steps to establish a democratic society where citizens can freely exercise their fundamental rights without fear of reprisals.

සිවිල් ක්‍රියාකාරීත්වය මර්දනය කිරීම සම්බන්ධ ප්‍රකාශය

රටේ පාලන තන්ත්‍රයට අභියෝග කරමින්, සාමකාමී අරගලයට සම්බන්ධ වූ පුරවැසියන්, විවිධ හේතු දක්වමින් අත්අඩංගුවට ගැනීම සහ පීඩාවට පත් කිරීමේ ප්‍රයත්න ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය තරයේ හෙළා දකියි. එමෙන්ම, රටේ සමස්ත පුරවැසියන්ට හිමි පොදු දේපළවලට හානි පැමිණවීම ආශ්‍රිත සිදුවීම් ද ඕනෑම අවස්ථාවක දී අපි තරයේ ප්‍රතික්ෂේප කරන්නෙමු.

නමුත්, ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත සහ අනෙක් නීතිවල ප්‍රතිපාදන සිය අභිමතය පරිදි භාවිත කර, දූෂණයෙන් තොර රටක් උදෙසා හඬ නැගූ පුරවැසියන් සිරභාරයට ගැනීමෙන් සහ සාධාරණ සැකයක් රහිත අවස්ථාවල දී දිගින් දිගටම ප්‍රශ්න කිරීමෙන්, ඔවුන්ගේ මානව හිමිකම් උල්ලංඝනය වීමක් සිදු වන බව පෙනී යයි. මෙවැනි තත්ත්වයන් නිසා අනාගතයේ දී සාධාරණ විරෝධය පෑම යනාදී ප්‍රජාතාන්ත්‍රික භාවිතයන් ක්‍රියාවේ යෙදවීමට පුරවැසියන් පැකිළෙනු ඇති අතර එවිට රට බරපතල තත්ත්වයකට පත් වනු ඇත. ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතෙහි තාවකාලික ප්‍රතිපාදනවලට මුවා වී, රටේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවෙන් පුරවැසියන් හට හිමි කර ඇති භාෂණයේ නිදහස, ආශ්‍රය කිරීමේ නිදහස සහ රැස්වීමේ නිදහස නොතකා කෙරෙන අත්අඩංගුවට ගැනීම්, විධායකය සහ රාජ්‍ය යාන්ත්‍රණයෙන් පුරවැසියන් වෙනුවෙන් භාවිත කළ යුතු රාජ්‍ය බලය අවභාවිත කිරීමක් ලෙස අරුත් ගැන්විය හැකිය.

නීතිය සියලු දෙනාට සාධාරණ විය යුතු දෙයක් විනා විරුද්ධ මතධාරීන් මර්දනය කිරීමට භාවිත කරන දේශපාලනික අවියක් නොවිය යුතුය. එහෙත් මහා පරිමාණ වශයෙන් වැරදි කළ අයට ක්‍රියාත්මක නොවන නීතිය, තෝරාගත් පිරිසකට එරෙහිව පමණක් ක්‍රියාත්මක වන තත්ත්වයක් අද දක්නට ඇත. නීතියේ සර්වසාධාරණ බව තහවුරු කිරීම උදෙසා විධායකය වගවිය යුතු බව ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය අවධාරණය කරයි.

ක්‍රම වෙනසකට සහ දූෂණය මුලිනුපුටා දැමීම උදෙසා නීත්‍යනුකූලව හඬ නැගූ පුරවැසියන් සහ සිවිල් සමාජ ක්‍රියාධරයන් සමඟ TISL ආයතනය අත්වැල් බැඳගෙන සිටියි. එසේ ක්‍රියා කිරීම නිසා පීඩනයට පත් කර ඇති සියලු දෙනාට එරෙහිව ඇති රැඳවුම් නියෝග අත්හිටුවා, මානව අයිතිවාසිකම් ක්‍රියාවේ යෙදවිය හැකි ප්‍රජාතාන්ත්‍රික සමාජයක් ස්ථාපිත කිරීමට අවශ්‍ය කඩිනම් පියවර ගන්නා ලෙස ට්‍රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්‍රී ලංකා ආයතනය ජනාධිපති ප්‍රමුඛ රජයෙන් ඉල්ලා සිටියි.

சிவில் செயற்பாட்டின் அடக்குமுறை தொடர்பான அறிக்கை

நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது வன்மையாக கண்டிக்கிறது. மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் TISL நிறுவனமானது தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.

ஊழலற்ற நாட்டினை உருவாக்கும் நோக்குடன் குரலெழுப்பிய பொதுமக்களை தன்னிச்சையாகவும் நியாயமான சந்தேகங்களுக்கு இடமின்றிய நிலையிலும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய சட்ட ஏற்பாடுகளை தவறாக பயன்படுத்துவதனை TISL நிறுவனமானது உன்னிப்பாக அவதானிக்கிறது.

சட்டத்தின் இத்தகைய தன்னிச்சையான பிரயோகமானது பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பின்பற்ற தயக்கம் காட்டும் நிலைமையினை உருவாக்கும் அதேவேளை இவை நாட்டிற்கு மோசமான விளைவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும். நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் ஆகியவற்றை புறக்கணித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற கைதுகள் மற்றும் விசாரணைகளூடாக நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிறைவேற்றதிகாரம் மற்றும் அரச அதிகாரங்கள் என்பன துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கருதப்படலாம்.

சட்டத்தின் பார்வையில் ஒவ்வொரு குடிமகனும் சமமானவர்களே ஆகவே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை அடக்கும் ஆயுதமாக சட்டத்தினை பயன்படுத்தக் கூடாது. எவ்வாறாயினும், இன்றைய கால கட்டத்தில் பாரியளவான ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை ஏனையவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின் முழு வலிமையையும் பிரயோகிக்கப்படுகின்ற போது சட்டத்தின் பயன்பாடானது மக்களிடையே சமமாக நிலைநாட்டப்படவில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதில் நிறைவேற்று அதிகாரத்தில் இருப்போர் பொறுப்புக்கூற வேண்டும் என TISL நிறுவனம் வலியுறுத்துகின்றது.

ஊழலை ஒழித்து உண்மையான முறைமை மாற்றத்தினை உருவாக்கும் நோக்குடன் சட்ட வரம்பெல்லைகலுக்குள் உட்பட்டு, குரல் எழுப்பிய பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களுடன் TISL நிறுவனம் கைகோர்கிறது. தடுப்புக்காவல் உத்தரவுகளை ரத்து செய்து, பொதுமக்கள் தமது அடிப்படை உரிமைகளை பழிவாங்கல்களுக்கு அஞ்சாமல் சுதந்திரமாக அணுகக்கூடிய ஓர் ஜனநாயகமான சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை TISL நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.