Transparency International Sri Lanka on Monday (15/11/2021) submitted a complaint to the Commission to Investigate allegations of Bribery or Corruption (CIABOC), calling for an investigation into the alleged unexplained assets of retired senior public official Mr. Ramalingam Paskaralingam.
The Pandora Papers investigation by the International Consortium of Investigative Journalists (ICIJ) alleges that Mr. Paskaralingam has assets worth millions of dollars in overseas companies and trusts.
TISL noted that the information in this exposé could point to actions amounting to offences under Section 23A of the Bribery Act, since the amount of wealth that has been exposed cannot be accounted for through the monthly salary of a public official who held office as a Secretary to a Ministry or an advisor to the Prime Minister.
Therefore, TISL requested the Commission to probe into the Declarations of Assets and Liabilities of Mr. Paskaralingam, and to carry out an investigation. TISL also noted that Mr. Paskaralingam could be identified as a Politically Exposed Person (PEP), according to the Financial Action Task Force which defines a PEP as an individual who is or has been entrusted with a prominent public function that can be potentially abused for the purpose of committing corruption, bribery, money laundering, and terrorist financing.
TISL stated that this complaint is lodged in the interest of the public, who are the owners of the public funds and public resources of Sri Lanka, and urged the Bribery Commission to keep the public informed about the progress of the investigation.
ආර්. පාස්කරලිංගම් මහතාගේ වත්කම් පිළිබඳ විමර්ශනයක් සිදු කරන්නැයි TISL ආයතනය අල්ලස් කොමිසමෙන් ඉල්ලයි.
ට්රාන්ස්පේරන්සි ඉන්ටනැෂනල් ශ්රී ලංකා ආයතනය සඳුදා දින (15/11/2021) අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC) වෙත පැමිණිල්ලක් යොමු කරමින්, විශ්රාමික ජ්යේෂ්ඨ රාජ්ය නිලධාරී ආර්.රාමලිංගම් පාස්කරලිංගම් මහතාගේ පැහැදිලි නොකරන ලද බවට චෝදනා ලබා ඇති වත්කම් පිළිබඳව විමර්ශනයක් සිදු කරන ලෙස ඉල්ලා සිටියේය.
ආර්.පාස්කරලිංගම් මහතා සතු ඩොලර් මිලියන ගණනක් වටිනා වත්කම් විදේශීය සමාගම් සහ භාරයන් තුළ පවතින බවට පැන්ඩෝරා පත්රිකා විමර්ශනය හරහා ගවේශනාත්මක මාධ්යවේදීන්ගේ ජාත්යන්තර සම්මේලනය (ICIJ) චෝදනා කර සිටී.
TISL ආයතනය අවධාරණය කර සිටින්නේ, හෙළිදරව් කර ඇති විශාල ප්රමාණයකින් යුතු ධනය, අමාත්යංශ ලේකම් වරයෙකු වශයෙන් හෝ අග්රාමාත්ය උපදේශක වශයෙන් කටයුතු කර ඇති රාජ්ය නිලධාරියෙකුගේ මාසික වේතනයෙන් උපයා ගත්තක් බවට සැලකිය නොහැකි බැවින්, මෙම හෙළිදරව්වෙන් ඉස්මතු කර ඇති තොරතුරු, අල්ලස් පනතේ 23(අ) වගන්තිය යටතේ දක්වන වැරදි හා අනුකූල විය හැකි ක්රියාවන් ලෙස පෙන්වා දිය හැකි බවයි.
එබැවින් TISL ආයතනය අල්ලස් කොමිසමෙන් ඉල්ලා සිටියේ පාස්කරලිංගම් මහතාගේ වත්කම් හා බැරකම් ප්රකාශන විමසා බලන ලෙසත්, විමර්ශනයක් සිදු කරන ලෙසත්ය. එමෙන්ම, TISL ආයතනය වැඩි දුරටත් සඳහන් කර සිටියේ, මූල්ය කාර්ය සාධක බලකායට (FATF) අනුව පාස්කරලිංගම් මහතා දේශපාලනික වශයෙන් අනාවෘත පුද්ගලයෙකු (PEPS) වශයෙන් ද සැලකිය හැකි බවයි. අල්ලස, දූෂණය, මුදල් විශුද්ධිකරණය හෝ ත්රස්තවාදී මූල්යකරණය වැනි අරමුණු සඳහා අවභාවිතයට ලක් කරලීමේ හැකියාව ඇති ප්රමුඛ රාජ්ය තනතුරු හා කාර්ය භාර්යයන් දරන හෝ දරා ඇති පුද්ගලයින් PEPS ලෙස නිර්වචනය කෙරේ.
මෙම පැමිණිල්ල ගොනු කරන ලද්දේ ශ්රී ලංකාවේ රාජ්ය අරමුදල් සහ රාජ්ය සම්පත් වල හිමිකරුවන් වන මහජනතාවගේ සුබසිද්ධිය උදෙසා බවත්, විමර්ශන කටයුතු වල ප්රගතිය පිළිබඳව මහජනතාව දැනුවත් කරන ලෙසත් TISL ආයතනය අල්ලස් කොමිසමෙන් ඉල්ලා සිටියේය.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது ஆர். பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது
ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியான இராமலிங்கம் பாஸ்கரலிங்கத்தின் விபரிக்கப்படாத சொத்துக்கள் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது கடந்த திங்கட்கிழமையன்று (15/11/2021) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஓர் முறைப்பாட்டினை சமர்ப்பித்தது.
கடல்கடந்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை அமைப்புக்களில் பாஸ்கரலிங்கத்திற்கு பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாக பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) நடாத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பகிரங்கப்படுத்திய தகவல்கள், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் 23A பிரிவின் கீழ் குற்றங்களுக்குச் சமமான செயல்களாக சுட்டிக்காட்டலாம் என TISL நிறுவனம் குறிப்பிட்டது, ஏனெனில் அமைச்சின் ஓர் செயலாளராக அல்லது பிரதமரின் ஆலோசகராக பணியாற்றிய ஒரு அரச அதிகாரிக்கு அவரது மாதாந்த சம்பளத்தின் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட குறித்த செல்வத்தினை அடைய முடியாது.
ஆகவே, பாஸ்கரலிங்கத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பில் ஓர் விசாரணையினை ஆரம்பிக்குமாறு ஆணைக்குழுவிடம் TISL நிறுவனம் தனது கோரிக்கையினை முன்வைத்தது. நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் (FATF) அடிப்படையில், பாஸ்கரலிங்கம் ஓர் அரசியல் ரீதியாக வெளிப்படும் நபராக (PEP) அடையாளம் காணப்படலாம் என்றும் TISL நிறுவனம் மேலும் குறிப்பிட்டது. PEP என்பது தனக்கு ஒப்படைக்கப்பட்ட முக்கிய பொதுச் செயற்பாட்டினை அல்லது முக்கிய பொது பொறுப்பினை இலஞ்சம், ஊழல், பண தூய்தாக்கல், மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யக்கூடிய அதிக சாத்தியப்பாடுளை கொண்ட ஓர் தனிநபர் என வரையறுக்கலாம்.
இலங்கையின் பொது நிதி மற்றும் பொது வளங்களின் உரிமையாளர்களான பொதுமக்களின் பொது நலன் கருதியே குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து வெளிப்படுத்துமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை TISL நிறுவனம் வலியுறுத்தியது.